2 தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 2 தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சூரப்பள்ளம் பகுதியில் ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரியின் பேருந்து மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது.

 

அப்போது எதிர் திசையில் வந்த மற்றொரு தனியார் கல்லூரி பேருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பேருந்து மீது நேருக்கு நேராக மோதி விபத்திற்குள்ளானது. இதில் பேருந்துகளில் பயணித்த சுமார் 22 மாணவ-மாணவிகள் லேசான காயமடைந்தனர்.

 

அவர்களுக்கு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறுகலான சாலையில் இரு பேருந்துகளும் அதிவேகமாக சென்றதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.


Leave a Reply