கடலூர் அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கடலூர் மாவட்டம் வெள்ளைபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஹம்சலேகா மற்றும் சுசீலா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சுசிலா வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற போது மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் உருட்டு கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.