மின் இணைப்பு பெட்டி திடீரென வெடித்ததால் பெண் உயிரிழப்பு!

சென்னையில் மின் இணைப்பு பெட்டிகளில் இருந்து கிளம்பிய தீப்பொறி பெண்ணின் உடல் முழுவதும் பரவியதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டில் சேர்ந்த லீமா ரோஸ் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார்.

 

அப்போது தெருவில் இருந்த மின் இணைப்பு பெட்டி திடீரென வெடித்ததுடன் அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி லீமாரோஸின் உடல் முழுவதும் பற்றிக்கொண்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் தீக்காயமடைந்த லீமாரோஸ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சூளைமேடு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply