70 வயதிலும் சுறுசுறுப்பு எப்படி? நடிகர் ரஜினி காந்த் விளக்கம்

70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். தர்பார் திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் திரைக்கு வரும் நிலையில் தெலுங்கு தர்பார் படத்திற்கான விளம்பர நிகழ்ச்சி நேற்று இரவு ஹைதராபாத்தில் நடந்தது.

 

அப்போது பேசிய அவர் 70 வயதிலும் எப்படி உங்களால் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது என எல்லோரும் தன்னிடம் கேட்பதாக கூறினார். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள் இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம் என ரஜினிகாந்த் பதிலளித்தார்.


Leave a Reply