தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். மங்கலம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஜெய மங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அவர் தன் நண்பர்களுடன் அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் சென்று இருக்கிறார்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. அதில் கடுமையாக தாக்கப்பட்ட கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பெரியகுளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகராறில் ஈடுபட்ட இரு குழுவினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் ஏற்பட்டு விடாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார்த்திக் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.