மானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஜனவரி மாதத்தில் 20 ரூபாய் அதிகரித்துள்ளது. மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 20 ரூபாய் உயர்ந்து 734 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் முதல் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் 714 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 143 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.