விடுமுறை நாட்களை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த திட்டம்

தொடர் விடுமுறை நாட்களை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளை செயல்பட வைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

 

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை ஜனவரி 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதை எடுத்து தொடர் பொங்கல் விடுமுறை என்பதால் பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொது தேர்வுக்காண பாடங்களை நடத்தி முடிப்பதில் செய்முறை மற்றும் திருப்புதல் தேர்வுகளை நடத்தி முடிப்பது சிக்கலாகிவிட்டது.

 

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பொங்கல் விடுமுறையை தொடர்ந்து அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply