--- --:--:-- --

காணாமல்போன 6வயது சிறுவன் கழுத்தை நெரித்துக் கொலை..

2

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. கோவில்பட்டி முத்துலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரது ஆறு வயது மகனை நேற்று முதல் காணவில்லை என உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.

 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துலாபுரம் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சிறுவன் நகுலனை கொன்றது தெரியவந்தது. சிறுவனின் உடலை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 

அதனால் சில கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்தன. இதற்கிடையில் அருள்ராஜ் அடையாளம் காட்டிய புதர் பகுதியிலிருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சிறுவன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon