ஆதார் – பான் எண் இணைப்பு! அவகாசம் மேலும் நீட்டிப்பு!

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. இதற்கான அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் அது வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் ஏராளமானோர் இன்னும் இணைக்காமல் இருப்பதால் இதற்கான அவகாசம் இன்னும் நீட்டிக்கப்பட உள்ளது . ஆதார் எண் பான் எண்வ இணைப்பு கட்டாயம் என கடந்த ஆண்டு அரசு அறிவித்த நிலையிலும், அவற்றை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply