இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை
சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பதினோராம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த சிறுமி ஒருவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
அந்த மாணவி முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் என கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையை சேர்ந்த அல்ஹசன் என்பவருக்கும், மாணவிக்கும் அறிமுகம் ஏற்பட்டதாக தெரிகிறது.
நண்பர்களாக இருந்த இருவரும் நாளடைவில் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது அந்தரங்க புகைப்படங்களை அல்ஹசனுக்கு மாணவி அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அதை வைத்து அல்ஹசன் மாணவியை மிரட்டி அவரை நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனால் மாணவி கருவுற்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அல்ஹசனை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




