மதம் மாறுவதற்கான அழுத்தம் இருந்ததில்லை – பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் கனேரியா விளக்கம்
மதம் மாறுவதற்கான அழுத்தம் எப்போதும் இருந்ததாக தெரியவில்லை என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தனே கனேரியா தெரிவித்துள்ளார். இந்து சமயத்தை சேர்ந்த தனே கனேரியாவை சில வீரர்கள் மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சயப் அக்தர் கூறியிருந்தார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் தனியாக இருந்ததால் சில வீரர்களின் இலக்குக்கு ஆளானதாகவும், ஆனால் ஒருபோதும் மதம் மாறுவதற்கான அழுத்தம் இருந்ததில்லை எனவும் கூறியுள்ளார். அதேநேரத்தில் யூசுப் மதம் மாறியது தொடர்பான கேள்விக்கு தனி நபர் குறித்து பேச விரும்பவில்லை என்றும் தனே கனேரியா தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




