உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ் மோகன் உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக சென்னையில் காலமானார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த நீதிபதி மோகன் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் பணிபுரிந்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட மோகன், 1995-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

 

முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். நீதிபதி மோகனின் மறைவுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.


Leave a Reply