சிவகங்கை அருகே பட்டதாரி பெண் ராஜினாமா கடிதத்துடன் நூதன முறையில் பிரச்சாரம்!

சிவகங்கை அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பட்டதாரி பெண் ராஜினாமா கடிதத்துடன் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருந்தம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் மனைவி செல்வராணி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். பட்டதாரி பெண்ணான அவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தன்னை தேர்ந்தெடுத்தால் ஊழலின் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

20 ரூபாய் பத்திரத்தில் ராஜினாமா கடிதம் எழுதியவர் அதனை வீடுவீடாக விநியோகித்த படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரது நூதனமான பிரச்சாரத்தைக் கண்டு கிராம மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Leave a Reply