100 வயதைக் கடந்த மூதாட்டியின் ஜனநாயக கடமை!
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பூலாவரி கிராமத்தில் 100 வயதை கடந்த மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். சின்ன பிள்ளை என்ற 100 வயது மூதாட்டி வரிசையில் நின்றபடி தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஓசூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி அக்ரகாரம் ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இக்கிராமத்தில் 110 வயதான மூதாட்டி எல்லம்மாள் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னீர்குப்பத்தில் 87 வயது மூதாட்டி பாப்பம்மாளை அவரது மருமகள் பாண்டியம்மாள் வாக்குச்சாவடிக்கு தூக்கி சென்று வாக்களிக்க வைத்தார். இதனை நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




