--- --:--:-- --

இறந்தவர் பட்டியலில் வாக்களிக்க வந்தவரின் பெயர்!

3

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்களிக்க வந்தவரின் பெயர் இறந்தவரின் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டதால் வாக்காளர் அதிர்ச்சி அடைந்தார், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூடுவார்பட்டி கிராமத்தில் சேகர் என்பவர் வாக்களிக்க வந்தார்.

 

வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இருந்த நிலையில் துணை வாக்காளர் பட்டியலில் சேகர் இறந்துவிட்டதாக பதிவாகி இருப்பதால் அவர் வாக்கு பதிவு செய்ய தேர்தல் பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.

 

இதனால் சேகர் தனது ஓட்டுரிமையை தேர்தல் கண்காணிப்பு பணியாளரிடம் கேட்டபோது அவர்கள் மூடுவார்பட்டி கிராமத்தில் இறந்துவிட்ட மற்றொரு நபரின் பெயரோடு குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும், சேகரின் வாக்குரிமை முறைப்படி பெற்று தரப்படும் என்றும் கூறுகின்றனர். இதனால் மூடுவார்பட்டி வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon