--- --:--:-- --

‘அடல் பூஜல்’ திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

4

நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் அடல் பூஜல் திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் பங்களிப்போடு அடல் பூஜல் யோஜனா எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

இதில் தமிழகம் சேர்க்கப்படாத நிலையில் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் நீர்நிலை பராமரிப்பதற்காக குடிமராமத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon