பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்த 92 வயதான மூதாட்டிக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றத்தினர்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்த 92 வயதான மூதாட்டி க்கு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கி ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். கோவை மாவட்டம் கொண்டயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 92 வயதான மூதாட்டி கமலம்மாள்.

 

இவர் 31 ஆயிரத்து 500 ரூபாய் பழைய நோட்டுகளை சேமித்து வைத்திருந்தார். தான் சேமித்த பணத்தையே மறந்த அவர் தற்போது தான் அதை எதேச்சையாக பார்த்துள்ளார். அதில் 51 பழைய ஐநூறு ரூபாய் நோட்டுகளும் 6 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் அடங்கும். இந்த பணத்தை மாற்ற முடியாமல் கமலம்மாள் தவித்து வருவது குறித்து சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

 

இந்நிலையில் கமலம்மாள் பாட்டிக்கு உதவும் வகையில் கோவை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 31 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் வழங்கப்பட்டது. இதுகுறித்து மூதாட்டி கமலம்மாள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Leave a Reply