பிரதமர் மீதான ராகுலின் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

நாட்டில் தடுப்புக்காவல் மையங்கள் எதுவுமில்லை என பாரத மாதாவிடம் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்கிறார் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சாடியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் பிரதமர் என்றும் நரேந்திர மோடி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் விமர்சித்திருந்தார்.

 

இஸ்லாமியர்கள் தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பப்படுவர் என காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் வதந்தி பரப்புகிறார்கள் என்று பிரதமர் பேசிய காணொளியையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அசாமில் கட்டமைக்கப்படுவதாக கூறப்படும் தடுப்பு காவல் மையம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

 

பிரதமர் மோடி மீதான ராகுலின் விமர்சனத்திற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. தடுப்பு காவல் மையங்களுக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் பொய் பேசுவதில் ராகுல் வல்லவர் என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

அசாமில் தடுப்புக்காவல் மையங்கள் அமைப்பதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்ட அறிக்கையையும் அவர் செய்தியாளர்களிடம் காட்டினார்.


Leave a Reply