மென்னந்தி நாகாச்சி ஊராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவேன்! தலைவர் பதவி இளம்வயது வேட்பாளர் வாக்குறுதி!

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் மென்னந்தி நாகாச்சி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு இளம் வயது வேட்பாளர் தவம் என்ற ஆ.முனியசாமி முதல் முறையாக போட்டியிடுகிறார். இவர் தனது ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சாலை அமைப்பேன். தெரு மின்விளக்குகளை சரி செய்வேன் என கடந்த கால வாக்குறுதிகளை அள்ளி வீசாமல், ஊராட்சியை நகராட்சிக்கு இணையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவேன் என்ற புதிய கண்ணோட்டத்துடன் பிரசார யுக்தியை கையில் எடுத்துள்ளார்.

 

அவர் தனது பிரசாரத்தில், நீண்ட கால கோரிக்கையான மென்னந்தி – நாகாச்சி இடையே பாலம் அமைத்து தருவேன். குற்றங்களை தடுக்க கிராமங்கள் தோறும் கண்காணிப்பு கேமரா பொருத்துவேன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் இலவச விபத்து காப்பீடு செய்து கொடுப்பேன். நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துவேன். கிராமத்தில் இலவச வைபி வசதி ஏற்படுத்தி தருவேன்.

 

மென்னந்தி, நாகாச்சி, அரச நகரி, கே.கருங்குளம் கிராமங்களில் உயர் கம்ப மின்விளக்கு அமைத்து தருவேன். ஊராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையம் அமைத்து தருவேன். தேசிய கிராமப்புற திட்டத்தின் கீழ் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று தருவேன். மென்னந்தி நாகாச்சி ஊராட்சியை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்று தமிழகத்தின் முதன்மை ஊராட்சியாக மாற்றுவேன்.


Leave a Reply