--- --:--:-- --

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தின் சி‌சி‌டி‌வி காட்சிகள்!

15

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தேன்கனிக்கோட்டை அருகே தென்னங்கூர் என்னும் இடத்தில் தனியார் பேருந்தை இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் முன்னேறி செல்ல முயன்றனர்.

 

அந்த சமயத்தில் எதிர் திசையில் மற்றொரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. வேகத்தை கட்டுப்படுத்த முடியாத இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.

 

தலைக்கவசம் அணியாமல் சென்று படுகாயமடைந்த பாஞ்சாலி பகுதியை சேர்ந்த மோகன் என்ற இளைஞர் இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon