திருச்சியில் குதிரையில் பள்ளிக்குச்செல்லும் மாணவர்கள்

வழக்கமாக பள்ளிக்கு நடந்தோ, சைக்கிளிலோ மாணவர்கள் செல்வது வழக்கம். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 மாணவர்கள் குதிரைகளில் பள்ளிக்கு செல்கிறார்கள். திருச்சி வளநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் அழகர்சாமியும், இதே பகுதியை சேர்ந்த வேலு என்ற மாணவனும் தினமும் பள்ளிக்கு நாட்டு குதிரையில் தான் பயணிக்கிறார்கள்.

 

பள்ளிக்கு அருகே காட்டுப்பகுதியில் குதிரைகளை கட்டி போடும் சிறுவர்கள் இடைவெளி நேரத்தில் வந்து அவற்றிற்கு தண்ணீர் வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். மீண்டும் பள்ளியில் இருந்து வீடு திரும்புவதும் குதிரைகளில் தான். வளநாடு அருகே தேனுர் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் வங்கி கிளை ஒன்றில் மேலாளராக பணியாற்றுகிறார்.

 

இவர் நாட்டு இன குதிரைகளை காக்கும் முயற்சியாக குதிரைகளை வாங்கி வளர்க்கிறார். இவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள விவசாயி மகனான அழகர்சாமி குதிரையை ஆர்வத்துடன் பராமரிப்பதை பார்த்து அவனிடம் குதிரையை கொடுத்து பள்ளிக்கு செல்ல பழகி வருகிறார். இந்த முயற்சியால் நாட்டு குதிரை இனம் அழியாமல் பாதுகாக்கப்படும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் குதிரை வளர்ப்பவர்கள்.


Leave a Reply