பாலிவுட் நட்சத்திரங்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்

பாலிவுட் நட்சத்திரங்களும் வருங்கால நட்சத்திரங்களாக மின்ன உள்ள அவர்களது வாரிசுகளும் கிறிஸ்துமஸ் தினத்தை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

நடிகர்கள் சல்மான்கான், ரன்பீர் கபூர் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மும்பையில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இந்த நிகழ்வில் நடிகர்கள் துஷார் கபூர், ரித்தேஷ் தேஷ்முக், ஆயுஸ் ஷர்மா தங்கள் மனைவி மக்களுடன் கலந்து கொண்டனர்.

 

இதேபோன்று கரீனா கபூர் ஏற்பாடு செய்த கிறிஸ்மஸ் பார்ட்டியில் சோனாக்ஷி சின்கா,ஆலியா பட் உள்ளிட்ட நட்சத்திர வாரிசுகளுடன் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். மூத்த நடிகைகள் ஹெலனும் இவ்விழாவில் பங்கேற்றனர்.


Leave a Reply