குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னையில் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் இசை முழக்க போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கத்தில் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஒருநாள் இசை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் உண்ணாவிரதம் இருந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக மக்கள் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.