ஓட்டுக்காக கொடுத்த பரிசு பொருட்கள்.. மன உளைச்சலால் கோயிலில் ஒப்படைத்த நபர்

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டங்குறிச்சி ஊராட்சியில் ஓட்டுக்காக கொடுத்த பரிசுப் பொருட்களால் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறி வாக்காளர் ஒருவர் அவற்றை கோயிலில் ஒப்படைத்துள்ளார். கீழக்காவட்டங்குறிச்சி அருகே தையல் கடை நடத்தும் பச்சமுத்து என்பவரின் வீட்டில் வேட்பாளர்கள் பல்வேறு பரிசு பொருட்களை கொடுத்தது தெரியவந்தது.

 

இந்த பொருட்களால் தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிந்திக்க முடியாமல் இருப்பதாகவும் இவற்றால் தமக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கூறியவர் வேட்பாளர்கள் தந்த பரிசு பொருட்களை ஒப்படைத்தார்.


Leave a Reply