--- --:--:-- --

நித்தியானந்தா குறித்து பேச விரும்பவில்லை : மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்

3

நித்யானந்தா குறித்து பேச விரும்பவில்லை என மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார். தர்மபுரம் ஆதின மடத்தில் 26ஆவது ஆதீனமாக பொறுப்பேற்றதற்கு பிறகு முதன் முறையாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிகர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனத்திலும் ஈடுபட்டார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், தருமபுரம் ஆதீனம் ஆக பொறுப்பேற்றுள்ள மாசிலாமணி தேசிகர் சைவசித்தாந்தம் பைபிள், குரான் உள்ளிட்டவற்றை நன்கு அறிந்தவர் என புகழாரம் சூட்டினார்.

 

தொடர்ந்து பேசிய அவர் நித்தியானந்தா குறித்து தான் பேச விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon