இந்தியா உடைந்திவிட்டது என விமர்சித்த ஆஸ்திரெலிய பத்திரிகையாளர்! தக்க பதிலடி கொடுத்த ஹர்ஷா போக்லே

இந்தியா உடைந்துவிட்டது என்று விமர்சனம் செய்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளருக்கு இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தக்க பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடி நாசிக்களுடன் ஒப்பிடப்படுவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த பத்திரிக்கையாளர் டென்னிஸ், இந்தியா உடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு இந்தியா உடைந்து விட வில்லை என்றும் நாடு முழுவதும் மிகவும் துடிப்பான இளைஞர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தி வருவதாகவும் ஹர்ஷா டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். சில சமயங்களில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினாலும் நாங்கள் இந்தியர்கள் தான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


Leave a Reply