ரூ.15க்கு பிரியாணி! அலைமோதிய கூட்டம்

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் 15 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணியை வாங்கி ருசிக்க ஏராளமானவர்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.

 

காந்திபுரம் இரண்டாவது வீதியில் அமைக்கப்பட்டிருந்த உணவகம் திறப்பு விழா சலுகையாக சிக்கன் பிரியாணி 15 ரூபாய் என்று விளம்பரம் செய்திருந்தது. இறைச்சி இல்லாத பிரியாணி 10 ரூபாய், பரோட்டா 5 ரூபாய் என்றும் பிற உணவு வகைகளுக்கு பாதி விலை என்றும் சலுகைகளை அறிவித்து இருந்தன.

 

இதை அறிந்த மக்கள் 15 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணியும், சலுகை விலையில் பிற உணவுகளை ருசிக்க உணவகத்தின் முன்பாக திரண்டனர். ஒரே நேரத்தில் இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் கடை மட்டுமின்றி அந்த வீதி முழுவதுமே கூட்டமாக காணப்பட்டது.

 

பின்னர் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் பிரியாணி உணவு உள்ளிட்ட வகைகள் வழங்கப்பட்டன. சலுகையிலும், பாதி விலையிலும் கிடைத்த உணவுவகைகள் சுவையாக இருந்ததாகவும் காந்திபுரம் மக்கள் கூறினர்.


Leave a Reply