தமிழகத்தில் 90% தெரிந்த முழு சூரிய கிரகணம் …! வானில் நிகழ்ந்த அதிசயம்..!! நெருப்பு வளையமாக காட்சியளித்த சூரியன்..!!!
முழு சூரிய கிரகணத்தை முன்னிட்டு, நெருப்பு வளையமாக காட்சியளித்த சூரியனின் அற்புதக் காட்சி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 90 சதவீத அளவுக்கு தெரிந்தது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் கடக்கும் நிகழ்வை சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். ஆண்டுக்கு ஒரு முறை சூரிய கிரகணம் ஏற்பட்டாலும், உலகின் வெவ்வேறு பகுதிகளில் மட்டுமே முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தெரியும் என அறிவிக்கப்பட்டிகுந்தது அதன்படி இன்று காலை 7.59 மணிக்கு தொடங்கி கிரகணம் தொடங்கி 11.19 மணி வரை நீடித்தது.

முழு சூரிய கிரகணம் 9.26 மணி முதல் 9.28 வரை 2 நிமிடத்திற்கும் மேல் நீடித்தது. அப்போது, சூரியன் நெருப்பு வளையமாக காட்சியளித்த அற்புத நிகழ்வு நிகழ்ந்தது. இந்த அற்புத , அரிய நிகழ்வு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தெரிந்தது. ஊட்டியில் இது 99 சதவீத அளவுக்கு தெரிந்தது. முழு சூரிய கிரகணம் கோவை, கரூர், தூத்துக்குடி மற்றும் கேரளா, கர்நாடகாவின் சில பகுதிகளில் முழுமையாக தெரிந்தது.
சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என கூறப்பட்டிருந்ததால் அறிவியல் மையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்க்கவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் லேசான மழைச்சாலும் இருந்ததால் வானில் நிகழ்ந்த அற்புத நிகழ்வை காண முடியாமல் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் தெரிந்த நிலையில்,இந்தியாவின் பல பகுதிகளிலும் பகுதி கிரகணம் மட்டுமே தெரிந்தது. ஆனாலும் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் போட்டி போட்டு இந்த சூரிய கிரகணத்தை நேரடி ஒளிபரப்பு செய்ததை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
பிரதமர் மோடியும் சூரிய கிரகணத்தை பார்த்தது குறித்து டுவிட்டரில் உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை நேரடியாக தம்மால் பார்க்க முடியவில்லை என்றாலும், கோழிக்கோட்டில் நிகழ்ந்த அற்புத நிகழ்வை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கண்டு ரசித்தேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




