பிரசார நோட்டீஸுடன் இருந்தது என்ன… மாவு பொம்மையா? மாந்திரீக பொம்மையா?

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பை ஒன்றில் பிரச்சார நோட்டீஸ் உடன் மாவு பொம்மை கண்டெடுக்கப்பட்டது. பார்ப்பதற்கு மாந்திரீகம் செய்து வீசப்பட்ட பொம்மை போல் அது இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

புதூர் ஏரிக்கரையை அச்சத்தில் ஆழ்த்தியது அந்த புதிர் பொம்மை. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே இருக்கிறது புதூர் ஏரிக்கரை. அங்கு பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதற்குள் மாவு பொம்மை ஒன்று ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெயலக்ஷ்மி என்பவரின் பிரச்சார நோட்டீஸ் உடன் இருந்தது.

 

அதுமட்டுமின்றி தமிழ் மற்றும் அரபி எழுத்துக்களால் எழுதப்பட்ட தாளும் காணப்பட்டது. மாவு பொம்மையின் தோற்றம் திரைப்படங்களில் வரும் மாந்திரீக காட்சிகளை நினைவுபடுத்தியது. அமாவாசை என்பதால் மாவு பொம்மை மாந்திரீகம் செய்து வீசப்பட்டதா? அல்லது யாரேனும் சூனியம் வைத்தார்களா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply