உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?

வரும் 27 மற்றும் 30-ஆம் தேதி நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆறு காரணங்கள் வாக்குச்சீட்டில் இருந்தால் அது செல்லாத ஓட்டாக கருதப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. முதலாவதாக முத்திரை இல்லாத வாக்குச்சீட்டுக்கள் நிராகரிக்கப்படும்.

 

சின்னத்தில் இல்லாமல் வெற்றிட பகுதியில் முத்திரை பதிந்து இருந்தால் அது நிராகரிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட சின்னங்களில் முத்திரை பதிவிட்டு இருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும். வாக்காளரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நோக்கில் வாக்குச்சீட்டில் ஏதேனும் குறியீடுகளை குறிப்பிட்டு இருந்தால் அதுவும் ஏற்கப்பட மாட்டாது.

 

கசங்கிய நிலையிலிருக்கும் வாக்குச்சீட்டு மற்றும் வாக்கு சீட்டு உண்மை தன்மைக்கு மாறாக இருந்தால் அதுவும் ஏற்கப்படாது. செல்லாத வாக்குகளை அறிவிக்க ஆறுவகையான ரப்பர் ஸ்டாம்புகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதனை பயன்படுத்தி அதிகாரிகள் செல்லாத வாக்குகளை அறிவிப்பர்.


Leave a Reply