இஸ்லாமியர்களுக்கு 150 நாடுகள் உள்ளன, இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே
இஸ்லாமியர்களுக்கு உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன என்றும், இந்துக்களுக்கு இந்தியா என்ற ஒரு நாடு தான் இருக்கிறது என்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி பேசியுள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் இந்தியா, பாகிஸ்தான் என தனித் தனி நாடாக பிரிந்த நேரத்தில் பாகிஸ்தானின் 22 சதவீத இந்துக்கள் இருந்ததாகவும், அச்சுறுத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களால் தற்போது 3% மக்களே இருப்பதால் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் நாடு திரும்ப நினைப்பதாகவும் தெரிவித்தார்.
இதேபோல ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் குடியேறிய இந்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து இருப்பதை விஜய் ரூபாய் சுட்டிக்காட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




