--- --:--:-- --

நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்த வேண்டும்

14

மக்கள் விரோத போக்கை கைவிட்டுவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

 

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் இந்திய பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிந்து இருப்பதாகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஐ‌என்‌எஃப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது பொருளாதார வளர்ச்சியில் பாஜக கவனம் செலுத்தாததை காட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக அரசின் நிர்வாக திறமை இன்மையால் தமிழகத்தின் வளர்ச்சியும் குன்றியுள்ளதாக ஸ்டாலின் சாடியுள்ளார். போராடத் தூண்டுவது பின் அதனை ஒடுக்குவது போன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon