சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் டிக்டாக் வீடியோ

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கத்தியுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட 5 இளைஞர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு தாம்பரத்தை சேர்ந்த நிஷாந்த், அஜித் குமார், தருண் குமார், கிஷோர் குமார், சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply