சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது
நீலகிரி மாவட்டத்தில் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் ஆனால் அதனை வெறும் கண்களால் நேரடியாக பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பத்தாண்டுகளுக்குப் பின் வளைந்த சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது.
இந்த கிரகணம் நீலகிரி, திருப்பூர், கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து உதகையில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் யாரும் வெறும் கண்களால் பார்க்க கூடாது எனவும் அவ்வாறு பார்க்கும்போது கண்பார்வை பாதிக்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




