காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடினர். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லையில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களும் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடினர்.
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்குள் இருக்கும் ராணுவ தளத்தில் கடும் பனிப்பொழிவிற்கிடையே 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இசை அமைத்து பாடல்கள் பாடி கொண்டாடினார். இந்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.