--- --:--:-- --

குடிகார போலீஸ் கணவரை கொன்றுவிட்டேன் என்னை தூக்கில் போடுங்க..

14

ஹரியானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியான தனது கணவரை கொலை செய்து விட்டதாகவும் அதற்காக தன்னை தூக்கிலிட வேண்டும் என்று கூறி அமைச்சரிடம் பெண் ஒருவர் மனு அளித்தார். அம்பாலாவில் மாநில உள்துறை அமைச்சர் பீச் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிக்கொண்டிருந்த போது மறைந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ரோத்தசிங்கின் மனைவி சுனில்குமாரி மனு அளித்தார்.

 

அவர் மதுவுக்கு அடிமையான தமது கணவர் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரவு வழக்கம்போல குடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், அப்போது கீழே விழுந்த அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டதாகவும் கூறியிருந்தார். குற்ற உணர்ச்சியால் அவதிப்படுவதால் தம்மை தூக்கிலிட அவர் கோரியிருந்தார். இதையடுத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon