--- --:--:-- --

டீக்கடையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 லட்சத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி

12

சென்னையில் டீக்கடை ஒன்றில் கேட்பாரற்று கிடந்த சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ஏழு கடல் பகுதியை சேர்ந்த பூட்டு சாவி வடிவமைக்கும் தொழிலாளி ரமேஷ் என்பவர் அதே பகுதியில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்தும் போது அங்கு ஒரு பை கேட்பாரற்று கிடந்ததை கண்டுள்ளார்.

 

அதில் சுமார் 3 லட்சம் ரூபாய் இருப்பதை கண்ட தொழிலாளி அதை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.. அந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon