29ஆம் தேதி அமிதாப் பச்சனுக்கு பால்கே விருது

திரைப்படத்துறையின் ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கு வரும் 29ம் தேதி தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்படும் என்று தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார்.

 

காய்ச்சல் காரணமாக டெல்லியில் நடைபெற்ற 66 ஆவது தேசிய விருது விழாவில் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் விருது வெற்றியாளர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 29ஆம் தேதி தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது அமிதாப்பச்சனுக்கு விருது வழங்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply