--- --:--:-- --

தந்தைக்கு மது வாங்கிக் கொடுத்து மகளை பாலியல் கொடூரம் செய்த இளைஞர்

7

தந்தைக்கு மது வாங்கி கொடுத்து போதையில் சாய்த்துவிட்டு அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 25 நாட்களாக தலைமறைவாக இருந்த இளைஞர் சிக்கியது எப்படி?

 

குமரியில் தந்தைக்கு மது வாங்கி கொடுத்து போதையில் சாய்த்துவிட்டு பிளஸ் 1 படிக்கும் அவரது மகளை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் 25 நாள் தேடுதலுக்கு பின்னர் சரணடைந்துள்ளார். போலீசாரின் மாவுக்கட்டு பயந்து நீதிமன்றத்தில் சரணடைந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீன்பிடி தொழிலாளியின் மகள் கொடூர இளைஞரிடம் சிக்கியது எப்படி?

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான மீன்பிடி தொழிலாளி. அவருடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் அதே பகுதியை சேர்ந்தவர் 36 வயதான ஆரோக்கிய ஜூன். இருவரும் பணி முடித்து விட்டு மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி ஆரோக்கிய ஜூன் மது வாங்கிக் கொண்டு தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அங்கு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது வீட்டிற்குள் நண்பரின் வாய் பேச முடியாத, காது கேட்காத மனைவியையும் அவரது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகள் இருப்பதையும் பார்த்துள்ளார். இதையடுத்து கொடூரமாக யோசித்த ஆரோக்கிய ஜூன் நண்பருக்கு அதிகளவில் மதுவை ஊற்றிக் கொடுத்து போதையில் சாய்த்துள்ளார்.

 

பின்னர் வீட்டிற்குள் இருந்த பதினோராம் வகுப்பு படிக்கும் நண்பரின் மகளை மிரட்டி ஆரோக்கிய ஜூன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவியை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். போதை தெளிந்து காலையில் எழுந்த தந்தையிடம் நடந்த கொடுமையை சிறுமி கூறியுள்ளார்.

 

இதை கேட்டு அதிர்ந்து போன அந்த மீன்பிடி தொழிலாளி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆரோக்கிய ஜூன் மீது புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோக்கிய ஜூன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த ஆரோக்கிய ஜூன் தலைமறைவானார். அவ்வப்போது ஊருக்குள் வருவதும், போலீசார் நெருங்கியதும் மீண்டும் தலைமறைவாவதும் என போக்கு காட்டி வந்தார்.

 

இந்நிலையில் போலீசாரின் பிடி இறுகியதையடுத்து மாவுகட்டுக்கு பயந்தது பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார். நண்பருக்கு மது வாங்கி கொடுத்து மதுபோதையில் தள்ளிவிட்டு அவரது மகளை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குமரி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon