உள்ளாட்சித் தேர்தல்: நாளையுடன் நிறைவடைகிறது பரப்புரை!

உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அப்பகுதிகளில் நாளை மாலை 5 மணிக்கு பரப்புரை நிறைவு பெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

வரும் 30 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள பகுதிகளில் 28ஆம் தேதி மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடையும் என மாநில தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பரப்புரை முடிவுக்கு வந்த பின்னர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி எல்லைக்குள் இருக்கும் வாக்காளர் அல்லாதவர்கள் வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் வெளியேறவேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply