500 ரூபாய் கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக கேரள இளைஞன் கைது

தேனி மாவட்டம் போடியில் 500 ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்ததாக கேரள இளைஞரை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் இருந்து கள்ளநோட்டு கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக கேரளாவிலிருந்து போடிக்கு வந்த பேருந்தை சோதனையிட்டதில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 100 கள்ள நோட்டுகள் வைத்திருந்ததாக டிஜோ என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply