இளம்பெண்ணின் முதுகில் 2 ஆண்டுகளாக இருந்த தோட்டா

ஹைதராபாத்தில் 19 வயது பெண்ணின் முதுகில் மர்மமான முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருந்த தோட்டாவை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இளம்பெண் அஸ்மா பேகம் கடுமையான முதுகுவலியால் நிம்ஸ் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

 

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலில் துப்பாக்கி தோட்டா ஒன்று இருப்பதை கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றினர். தோட்டா முதுகில் துளைத்தது எப்படி என்ற கேள்விக்கு அஸ்மா பேகம் மற்றும் அவரது குடும்பத்தினர் சரியான பதில் அளிக்காததால் மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து அங்குள்ள போலீசுக்கு தகவல் அளித்தனர்.

 

இதையடுத்து நடந்த போலீஸ் விசாரணையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், தன்னை தோட்டா தொலைத்தது எப்படி என்று தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply