குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜமாத்கள் ஒன்றிணைந்து பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தருமபுரியில் உள்ள அனைத்து ஜமாத்துகளும் ஒன்றிணைந்து பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடுமுழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தர்மபுரி பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி மாவட்டத்தில் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply