மதுரையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்று கொண்டிருந்த காரை பாரதிய ஜனதா கட்சியினர் வழி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் சென்று கொண்டிருந்தபோது புதூர் அருகே பாஜகவினர் அவரை வழிமறித்தனர்.
பாஜக இளைஞரணி மாநில செயலாளர் சங்கர் பாண்டி தலைமையிலான தொண்டர்கள் முரசொலி நிலம் விவகாரம் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து ஸ்டாலின் வாகனத்தில் வந்திருந்த பாதுகாவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்டாலின் கார் பின்னால் அணிவகுத்து சென்றனர்.