குஜராத்தில் 271 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்திவைத்த தொழிலதிபர்…!

குஜராத் மாநிலம் சூரத்தில் தொழிலதிபர் ஒருவர் 271 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். தந்தையை இழந்த பெண்களுக்கு சூரத் நகரை சேர்ந்த மகேஷ் ஜவானி என்ற தொழிலதிபர் பிரம்மாண்ட மைதானத்தில் ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இதில் இஸ்லாமிய ஜோடிகளும் இடம்பெற்றிருந்தன. மணம் முடித்து வைக்கப்பட்ட 271 ஜோடிகளுக்கும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அத்துடன் மணமகனுக்கு ஹெல்மெட்டும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


Leave a Reply