--- --:--:-- --

குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது

5

குடியுரிமை சட்டத் திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

இஸ்லாமிய மக்களின் குடியுரிமை பாதிக்கப்படும் என தொடர்ந்து பரப்பப்படும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலனிலும், பாதுகாப்பிலும் அக்கறையோடு தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் தவறான பிரச்சாரங்களுக்கு செவிசாய்க்காமல் அமைதி காக்க வேண்டும் எனவும் அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon