விமானத்தில் தகராறில் ஈடுபட்ட பாரதிய ஜனதா எம்பி பிரக்யா சிங் தாகூர் மீது சகபயணிகள் ஆத்திரம் அடைந்தார்கள். எங்களுக்கு தொந்தரவு கொடுப்பது உங்கள் வேலை இல்லை என்று பிரக்யா சிங் தாகூரிடம் அவர்கள் கூறினர்.
பிரக்யா தகராறில் ஈடுபடுவதால் அவரைக் கீழே இறக்கிவிட்டு விமானத்தை எடுக்குமாறு விமான ஊழியர்களிடம் பயணிகள் கூறினார். கடந்த சனிக்கிழமை டெல்லியிலிருந்து போபாலுக்கு செல்ல பாரதிய ஜனதா கட்சி பிரக்யா சிங் தாகூர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் முதல் வரிசையில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த சக்கர நாற்காலியில் வந்திருந்தார். இதனால் அவருக்கு பாதுகாப்பு கருதி முதல் வரிசையில் இருக்கை அளிக்க இயலாது என விமான ஊழியர்கள் கூறினர். இரண்டாம் வரிசை இருக்கை ஒதுக்கப்பட்டதால் இதனை ஏற்க மறுத்த பிரகியா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் விமானம் புறப்பட 45 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.பிரக்யாவின் நடவடிக்கைகளை அடுத்து சக பயணிகள் விமானத்தில் கோபத்தை வெளிப்படுத்தினர்.