இந்தியாவில் நிமிடத்துக்கு 95 பிரியாணி ஆர்டர்கள்- ஸ்விகி தகவல்

இந்தியாவில் நிமிடத்திற்கு சராசரியாக 95 பேர் பிரியாணி ஆர்டர் செய்வதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நடப்பாண்டின் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி ஸ்விக்கியில் பிரியாணியையே அதிகமானோர் ஆடர் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரியாணி முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ள ஸ்விக்கி சராசரியாக இரண்டு நொடிக்கு மூன்று பேர் வீதம் பிரியாணி ஆர்டர் செய்வதாக தெரிவித்துள்ளது.

 

கிச்சடி ஆர்டர் செய்வோரின் எண்ணிக்கை 128 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 17 லட்சம் குலாப்ஜாமுன் அவர்கள் இரண்டு லட்சம் அல்வா ஆர்டர்கள் மற்றும் 11 லட்சம் பலூடா ஆர்டர்கள் நடப்பாண்டில் வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply