தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அரசு மருத்துவர்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திருமணமான ஒன்பதாவது மாதத்தில் அரசு மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தக்கலியை சேர்ந்த நாலு கிருஷ்ணா என்பவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யா என்ற மருத்துவருக்கும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மாதம் கழிந்த நிலையில் மேற்படிப்பிற்காக மனைவி அகமதாபாத்தில் சென்றதால் அது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மனைவியிடம் செல்போனில் நீண்ட நேரமாக பேசிய லாலு கிருஷ்ணா பிறகு தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தக்கலை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




