ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு ஐந்தாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி கட்டமாக 16 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஜார்கண்ட் சட்டப்பேரவையில் பிரதான கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் நேரடியாக மோதுகின்றனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.